தந்தை செல்வாபோல தற்போது தம்பி கஜேந்திரகுமாரைப் பார்க்கின்றேன்!

364 7
 

நாங்கள் சின்னங்களைப் பார்த்து வாக்களிப்பவர்களல்ல எங்களுக்கு நல் எண்ணங்களும் கொள்கைகளுமே முக்கியமானவை எனத் தெரிவித்த நாயன்மார்கட்டில் வசிக்கும் வயதான பெண்மணி ஒருவர் மக்கள் நடக்கின்ற எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் தேசியப் பேரவையின் ஆதரவாளர்களால் ஒழுங்குசெய்யப்பட்ட தேர்தல் விளக்கக் கூட்ட நிகழ்வென்று நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் நாயன்மார்க்கட்டில் நடைபெற்றது. அந்நிகழ்வில் பெருமளவு மக்கள் கலந்துகொண்டிருந்தனர். அதில் கணிசமான அளவிற்கு பெண்கள் கலந்துகொண்டிருந்தனர் அவர்களில் ஒருவராக 80 வயதுடைய அம்மா ஒருவரும் கலந்துகொண்டிருந்தார். இரவு 7.30 மணிக்கு நிகழ்வு முடியும்வரை காத்திருந்த அவர் உங்களுடன் உரையாட விரும்புவதாகக் குறிப்பிட்டார். அதன்போது உரையாடிய அவர்,

“நான் தந்தை செல்வாவின் சத்தியாக்கிரகப் போராட்டகாலத்தில் போராட்டங்களில் கலந்துகொண்டிருந்தேன். உலகத் தமிழர் ஆராய்ச்சி மாநாட்டுப் படுகொலை இன்னமும் எங்கள் கண்களில் நிற்கிறது. அந்தப் புனிதமான இடத்தில் பிக்குவை எரித்த செய்தி கேள்விப்பட்டு கொதித்துப்போனேன். நான் உங்களின் அரசியலை கடந்த 7 வருடமாக அவதானித்துவருகின்றேன். நீங்கள் அன்று சொன்னதைத்தான் இன்றும் சொல்லிவருகிறீர்கள். நீங்கள் அன்று எச்சரித்த பல இன்று அரங்கேறிவருகின்றது. கடந்த தேர்தலிகளில் மக்கள் வாக்களிக்கவில்லை என்பதற்காக தற்போதும் அவ்வாறு ஏமாற்றப்படுவீர்களோ என்று யோசிக்காதீர்கள். மக்கள் தெளிவாகத்தான் உள்ளனர்.

கடந்த தேர்தலில் தீர்வைப் பெறுவதற்கு இறுதி ஆணை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கேட்டனர். நாங்களும் இறுதிச் சந்தர்ப்பம் என வீட்டுக்கு வாக்களித்தோம். ஆனால் எங்கள் ஆணைகள் விற்கப்பட்டுவிட்டது.

நானும் பரம்பரைத் தமிழரசுக் கட்சிக்காறிதான். ஆனால் நாங்கள் சின்னங்களுக்காக வாக்களித்தால் இப்படியே அடிமையாகவே இருக்கவேண்டியதுதான். நாங்கள் செல்வாவின் கொள்ளைகாக இதுவரை அவர்களுக்கு வாக்களித்தோம். இப்போது அவர்கள் கொள்கைவழியில் இல்லை. கொள்கை மாறாத தலைவர்களாக அண்ணல் காந்திபோல தந்தை செல்வாபோல தற்போது தம்பி கஜேந்திரகுமாரைப் பார்க்கின்றேன். இந்தத் தேர்தல் எங்களுக்கும் உங்களுக்கும் நல்லமாற்றத்தை உருவாக்கும் – என்றார்.

Leave a comment