வத்தளை – மாபோல பகுதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் வலம்புரி சங்குடன் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வத்தளை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த சங்கின் பெறுமதி நான்கு கோடி எனத் தெரியவந்துள்ளது.
மேலும், சந்தேகநபர்கள் மருதானை, வெல்லம்பிடிய மற்றும் கிரான்பாஸ் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் கூறியுள்ளனர்.
இதேவேளை, இவர்களை இன்று வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.