வவுனியா பழைய பேருந்து நிலையம் முதலமைச்சரின் உத்தரவின் பேரில் நள்ளிரவு முதல் மூடப்பட்டுள்ளது.
புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தனியார் மற்றும் இ.போ.ச பேருந்துகள் சேவையில் ஈடுபடவேண்டும் என தெரிவிக்கப்பட்டமையினால் பழைய பேருந்து நிலையம் நகரசபை மற்றும் பொலிசாரினால் மூடப்படுள்ளது.
இதேவேளை புதிய பேருந்து நிலையத்திற்கு செல்லுமாறு தம்மை வற்புறுத்தினால் இன்று முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக இ.போக்குவரத்து சபையின் இணைந்த தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.