மஹிந்த நிர்வாகத்தின் நற்பெயரை கெடுப்பதற்கு அரசாங்கம் முயற்சி

366 0

IMG_7913.jpg-1-450x304முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நிர்வாகத்தின் நற்பெயரை கெடுப்பதற்கு அரசாங்கம் மேலதிக நேரம் எடுத்து செயற்படுவதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஜெனிவாவின் கண்காணிப்புடன் பொறுப்புகூறல் விடயங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என கூறுவோர், தற்போது விடுதலை புலிகளுக்கு உதவி செய்ததாக தன் மீது குற்றஞ்சாட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.

வன்னி தாக்குதலின் இறுதி வாரத்தில் ராஜபக்சவின் தலையீட்டுடன் 200 க்கும் அதிகமான தமிழீழ விடுதலை புலிகள் நாட்டில் இருந்து இரகசியமாக வெளியேறியதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர முன்வைத்த குற்றச்சாட்டையும் அவர் நிராகரித்துள்ளார்.முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் முரணான அறிக்கைகளை அரசாங்கம் வெளியிட்டுவருவதாக கோட்டாபய ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மையில் நாடாளுமன்றத்தில் காணாமல் போனோர் தொடர்பான அலுவலக சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட பின்னர், முன்எப்போதும் இல்லாத குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் முன்வைத்துவருவதாக அவர் கூறியுள்ளார்.வன்னி கிழக்கு முன்னரங்க பகுதி உள்ளிட்ட ஏனைய நடவடிக்கைகளின் போது சரணடைந்த அனைத்து முன்னாள் போராளிகளும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாக கோட்டாபய ராஜபக்ச சுட்டிக்காட்டினார்.

200 க்கும் அதிகமான தமிழீழ விடுதலை புலிகள் நாட்டில் இருந்து தப்பிச் செல்வதற்கு உதவியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு தொடர்பான அனைத்து விடயங்களையும் வெளிப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.