நீண்டகால மக்கள் எதிர்பார்ப்புகளை வெற்றி கொண்டு நாம் பெற்றுக் கொண்ட சமூக, அரசியல் சுதந்திரத்தை மிகவும் அர்த்தமுள்ளதாக மாற்றியமைக்கும் முக்கிய பணியை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திய நிலையிலேயே 2018 ஆம் ஆண்டு பிறக்கிறது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள புத்தாண்டுச் செய்தியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கம் அமைக்கப்படும்போது நாட்டில் பாரிய சமூக, பொருளாதார, அரசியல் வீழ்ச்சி காணப்பட்டதுடன், கடுமையான கஷ்டங்களுக்கு மத்தியில் கூட நிலைபேறான அபிவிருத்திச் செயற்பாடு ஊடாக பொருளாதார ஸ்திரத்தன்மையை நோக்கிச் செல்ல நாம் நடவடிக்கை மேற்கொண்டோம்.
கடந்த காலப்பகுதியில் மக்களுக்கு சமூக, அரசியல், மானிட சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுப் பதற்கும், சர்வதேச ரீதியாக எமது நாடு தொடர்பாகக் காணப்பட்ட எதிர்மறையான மனப் பாங்குகளை மாற்றியமைத்து நட்புணர்வு மிக்க சூழலொன்றைக் கட்டியெழுப்பவும் முக்கிய கவனத்தினை செலுத்தி நடவடிக்கை மேற்கொண்டோம். தற்போது எமக்கு அவற்றின் சிறந்த பிரதிபலன்களைப் பெற்றுக் கொள்ள முடியுமான நிலைமை காணப்படுகிறது.
ஜனநாயக, தார்மீகப் பண்புகள் கொண்ட முன்னேற்றகரமான நாடாக முன்னோக்கிச் செல்வதற்காக எமது அரசாங்கம் இது வரைக்கும் மேற்கொண்ட வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதுடன், மிகுந்த பலத்துடன் இந்த வருடத்திலும் தொடர்ந்து முன்னோக்கிச் செல்ல நீங்கள் எம்மோடு இணைந்திருப்பீர்கள் என எதிர்பார்க்கிறோம்.
2018 ஆம் ஆண்டு அனைத்து சிறந்த நோக்கங்களும் அடையப் பெறும், துணிச்சல் மிகுந்த ஆண் டாக அமையட்டும் எனப் பிரார்த்திக்கிறேன் எனவும் பிரதமர் மேலும் கூறியுள்ளார்.