ஏனைய பௌர்ணமி தினங்களில் காட்சியளிக்கும் நிலவை விட, 14 மடங்கு பெரிய நிலவை இன்று அவதானிக்க முடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானிலை விண்வெளி அறிவியல் பிரிவு தெரிவித்துள்ளது.
பௌர்ணமி தினமான இன்று தென்படும் நிலவானது, ஏனைய நாட்களை விடவும், சுமார் 30 வீதம் பிரகாசம் அதிகமாக காணப்படும் என அப்பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.