பொலிதீன் தடை இன்று முதல் அமுல், சுற்றிவளைப்பு ஆரம்பம்- ம.சு.அ.ச.

306 0

பொலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை இன்று (01) முதல் அமுலுக்கு வருகின்றது.

இந்த தடை கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இருப்பினும், அதற்குத் தயாராவதற்கு 3 மாத கால அவகாசம் வழங்கப்பட்டது. அந்த அவகாசம் நேற்றுடன் நிறைவடைகின்றது.

இன்று முதல் இத்தடை அமுலுக்கு வருவதாகவும், இது தொடர்பான சுற்றிவளைப்புக்கள் இன்று முதல் மேற்கொள்ளப்படும் என மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் லால் மேர்வின் தர்மசிறி தெரிவித்துள்ளார்.

இந்த சுற்றிவளைப்புக்கள் கட்டம் கட்டமாக இடம்பெறும் என தெரிவித்த அவர், ஆரம்ப கட்டத்தில் பொலிதீன் உற்பத்தியாளர்களையும், அடுத்த கட்டமாக விநியோகத்தர்களையும், மூன்றாம் கட்டமாக வியாபார நிறுவனங்கள், உணவகங்கள் என்பவற்றையும் சுற்றிவளைப்புக்கு உட்படுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment