புத்தாண்டு கொண்டாட்டங்களால் சமூக வலைத்தளமான வாட்ஸ் அப் சேவை சுமார் அரை மணி நேரம் பாதிப்பு அடைந்தது.
பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமானது வாட்ஸ் அப் செயலி. பேஸ்புக்கை தொடர்ந்து உலகம் முழுவதிலும் எளிதில் தொடர்பு கொள்ளும் சமூக வலைத்தளமாக வாட்ஸ் அப் விளங்கி வருகிறது.
இதற்கிடையே, புத்தாண்டை வரவேற்கும் விதமாக மக்கள் முக்கிய இடங்களில் ஒன்றுகூடினர். அங்கு வாண வேடிக்கையுடன் புத்தாண்டை வரவேற்றனர். இதுதொடர்பான செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்களை வாட்ஸ் அப்பில் தங்களின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பி மகிழ்ந்தனர்.
இந்நிலையில், நேற்று நள்ளிரவில் புத்தாண்டு பிறந்ததை முன்னிட்டு, வாட்ஸ் அப் சேவை நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் சுமார் அரை மணி நேரம் முடங்கியது. அரை மணி நேரத்துக்கு பிறகு நிலைமை ஓரளவு சீரடைந்தது.
ஏற்கனவே, கடந்த நவம்பர் மாதம் உலகம் முழுவதும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வாட்ஸ் அப் சேவை செயல்படாமல் முடங்கியது குறிப்பிடத்தக்கது.