மெக்சிகோ: சுற்றுலாத் தலத்தில் கார்கள், பைக் மோதல் – 10 அமெரிக்கர்கள் பலி

3085 25

மெக்சிகோ நாட்டின் பிரபல சுற்றுலா தலத்தில் இரண்டு கார்களும், பைக்கும் மோதிய விபத்தில் 10 அமெரிக்கர்கள் பரிதாபமாக பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வட அமெரிக்கா கண்டத்தில் அமைந்துள்ள மெக்சிகோ நாடு. இங்குள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலம் அகாபுல்கோ. இந்த பகுதியில் தினமும் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து குவிவது வழக்கம்.

இந்நிலையில், அகாபுல்கோ நகருக்கும், ஜிகுவாடானேஜோ நகருக்கும் இடையே உள்ள நெடுஞ்சாலையில் ஒரு மோட்டார் சைக்கிளும், 2 கார்களும் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

விபத்து குறித்த தகவல் அறிந்ததும் மீட்புப்படையினர் அங்கு விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்தவர்கள் ஆம்புலன்சுகளில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், விபத்தில் பலியானவர்களில் மற்றவர்கள் 26 வயது முதல் 76 வயது வரையிலானவர்கள். அதே நேரத்தில் இந்த விபத்தில் பலியானவர்களில் வெளிநாட்டினர் யாராவது உள்ளனரா எனவும் விசாரணை நடத்தி வருகிறோம் என தெரிவித்துள்ளனர்.

Leave a comment