கோஸ்டா ரிகா: பயணிகள் விமானம் நொறுங்கி விழுந்து வெளிநாட்டவர் உள்பட 12 பேர் பலி

6212 15

கோஸ்டா ரிகா நாட்டில் தனியார் பயணிகள் விமானம் நொறுங்கி விழுந்த விபத்தில் 10 வெளிநாட்டவர்கள் பலியாகியுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய அமெரிக்காவில் அமைந்துள்ளது கோஸ்டா ரிகா நாடு. பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள புண்டா இஸ்லிடா நகரில் தனியார் பயணிகள் விமானம் ஒன்று பறந்து சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் 10 வெளி நாட்டவர்களும், ஊழியர்கள் 2 பேர் என மொத்தம் 12 பேர் பயணம் செய்துள்ளனர்.

சிறிது நேரத்தில் மேலே பறந்து கொண்டிருந்த விமானம் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் பயணித்த 12 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது என அந்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a comment