உள்ளூராட்சித் தேர்தலில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசிய பேரவையினர் தமது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பிக்குபொருட்டு இன்று (31.12.2017) ஞாயிற்றுக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் பேர்ணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை மற்றும் யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அடிகளால் ஆகியோரைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுள்ளனர்.
இன்று காலை 10.30 மணியளவில் யாழ் ஆயர் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பில் தமிழ்த் தேசியப் பேரவையின் யாழ் மாநகர முதல்வர் வேட்பாளர் வி.மணிவண்ணன், துணை முதல்வர் வேட்பாளர் ஆ.தீபன்திலீசன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் வேட்பாளர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் பேர்ணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையைச் சந்தித்தனர். அதன்போது அவர்களுடன் உரையாடிய யாழ் ஆயர் அவர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கினார். அதனையடுத்து ஆயர் இல்லதில் யாழ் மறை மாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அடிகளாரையும் தமிழ்த் தேசிய பேரவையினர் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றனர்.