முல்லைத்தீவில் இராணுவத்தினர் வசம் இருந்த 132 ஏக்கர் நிலப்பரப்பும் இன்றுடன் (31) பொதுமக்களுக்காக விடப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செலயம் அறிவித்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கேபாபிலவ் மற்றும் சீனிமோட்டை ஆகிய பிரதேசங்களிலுள்ள 132 ஏக்கர் நிலப்பரப்பை இராணுவத்தினர் பாதுகாப்புக் காரணங்களுக்காக வைத்திருந்ததாகவும் இப்பிரதேசமே விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு விடுவிக்கப்பட்ட காணிகளை உரிய மக்களுக்குப் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகளை முல்லைத்தீவு மாவட்ட செயலகம் ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது