கடந்த ஜனாதிபதித் தேர்தலைப் போன்று தேர்தலை வெற்றி கொள்வோம்- ரணில்

358 2

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியொருவரை தெரிவு செய்வதற்கு சகல கட்சிகளும் சுயேற்சைக் குழுக்களும் ஒன்று கூடியது போல ஐக்கிய தேசிய முன்னணியை வெற்றிகொள்ள இம்முறை உள்ளுராட்சி சபையிலும் இணைந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தமிழ் முற்போக்குக் கூட்டணி ஹட்டன் டி.கே.டபிள்யு. மண்டபத்தில் இன்று (31) நடாத்திய பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் பிரதமர் இதனைக் கூறியுள்ளார்.

அமைச்சர் பலனி திகாம்பரத்தின் வேலைத்திட்டங்களை இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூட புகழ்ந்து ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment