ஐ.தே.க.யின் தலைவர் ரணில்தான் 2020 இல் ஜனாதிபதி – அமைச்சர் பழனி திகாம்பரம் உறுதி

423 5

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை 2020 ஆம் ஆண்டில் ஜனாதிபதியாக்குவதற்கு தேவையான சகல ஒத்துழைப்பையும் வழங்க தயாராகவுள்ளதாக அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

தமிழ் முற்போக்குக் கூட்டணி ஹட்டன் டி.கே.டபிள்யு. மண்டபத்தில் இன்று (31) நடாத்திய பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி இந்நாட்டுக்கு சேவையாற்றியுள்ள ஒரு கட்சியாகும். அதேபோன்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இன, மத பேதம் பார்க்காமல் செயற்படும் ஒரு தலைவர் ஆகும். சகலரினதும் உள்ளங்களை வென்று செயற்படக் கூடிய ஒரு தலைவராக அவர் காணப்படுகின்றார்.

சிலர் பிரதமர் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களைச் சோடிப்பதற்கு முயற்சி எடுத்து வந்த போதிலும், அவற்றை நிரூபிக்க முடியாமல் உள்ளதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a comment