முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை 2018 ஆம் ஆண்டில் இந்நாட்டின் பிரதமராக மாற்றுவதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்கப் போவதாக முன்னாள் மேல் மாகாண சபை முதலமைச்சரும் தற்போதைய கூட்டு எதிர்க்கட்சி சார்பு பாராளுமன்ற உறுப்பினருமான பிரசன்ன ரணதுங்க ஹேஷ்யம் கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கௌரவமான முறையில் அரசியலிலிருந்து ஓய்வு பெறச் செய்வோம் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
அவர் தலைமயிலான அரசாங்கமொன்றை அமைத்துக் காட்டுவதற்காக தன்னை அர்ப்பணிப்பதாகவும் அம்பலாங்கொடயில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.