உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறை மாற்றமடைய வேண்டும்

2073 41

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் முறை விரைவாக மாற்றமடைய வேண்டும் என, வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

யாழில் வைத்து ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

இந்த தேர்தல் முறையினால் பாதிக்கப்படுவது பெரும்பாலும் சிறிய கட்சிகளே எனக் கூறிய அவர், இந்த விடயம் குறித்து எதிர்வரும் தேர்தலின் பின்னர் அரசாங்கத்தின் அவதானத்திற்கு கொண்டு வர தயாராகவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களைச் சார்ந்த சிறிய அரசியல் கட்சிகள் புதிய தேர்தல் முறையின் கீழ், கூட்டணி சேராமல் வெற்றி பெற முடியாது எனவும் வடக்கு முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இவ்வாறு கூட்டணி அமைக்கும் போது, அக் கட்சிகளின் தனித்துவம் மற்றும் எதிர்காலத்திற்கு பாதிப்பு ஏற்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுஇவ்வாறு இருக்க, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஆனந்த சங்கரியுடன் இணையப் போவதாக வௌியான தகவல்கள் குறித்து விக்னேஸ்வரனிடம் வினவப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், தனது வருங்கால அரசியல் பயணம் குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a comment