பால் கெட்டுப்போகாமல் ஐந்து வாரங்களுக்கு மேல் வைத்திருக்கும் புதிய முறையை Deakin பல்கலைக்கழக ஸ்ரீ பாலாஜி பொன்ராஜ் கண்டுபிடித்துள்ளார்.
தற்போது பாலைப் பாதுகாக்க வெப்பத்தைப் பயன்படுத்தி பாஸ்டரைசேஷன் செய்யப்படுகிறது. அப்படி செய்யும் போது, பாலிலுள்ள ஊட்டச் சத்துகளும் விரயமாகிப் போய் விடுகின்றன. பிளாஸ்மா கதிர்களைப் பயன்படுத்தி ஸ்ரீ பாலாஜி பொன்ராஜ் கண்டுபிடித்துள்ள புதிய முறையில், பால் ஊட்டச்சத்துகளை இழக்காமல் தக்கவைத்திருக்கிறது.