நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 13 பேரை எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
நேற்று இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் இரண்டு படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.