ஜெரூசலத்தைப் பேசும் பௌத்த தலைமைகள் நாட்டின் வரலாற்று அழிவுகளை காண்பதில்லை-இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ

370 0

ஜெரூசலம் பற்றிப் பேசுகின்ற இந்நாட்டு பௌத்த தலைமைகள், நாட்டில் அழிக்கப்படும் பௌத்த சின்னங்களைப் பற்றிப் பேசுவதில்லையென ராவணா பலய அமைப்பு அறிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவினதும் அமைச்சர் மனோ கணேசனினதும் நல்லிணக்க செயற்பாடுகளினால் சிங்களவர்களும், பௌத்தர்களும் மட்டுமே பாதிக்கப்படுவதாக அவ்வமைப்பின் செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை, சாம்புர் பிரதேசத்தில் வரலாற்றுச் சின்னங்கள் உடைத்தொழிக்கப்பட்டமைக்கு பொது மக்களே கைது செய்யப்பட்டனர். இவர்களின் பின்னாலுள்ள அரசியல்வாதிகள் கைது செய்யப்பட வேண்டும் எனவும் தேரர் பகிரங்க அறிவிப்புச் செய்துள்ளார்.

Leave a comment