ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாக்கும் நோக்கில் அக்கட்சியிலுள்ள சகல தரப்பினரதும் இணக்கத்துடனேயே கூட்டரசாங்கம் அமைக்கப்பட்டது எனவும், கட்சியின் பிளவுக்கு ஸ்ரீ ல.சு.க.யிலுள்ள மஹிந்த தரப்பு உறுப்பினர்களே பொறுப்புக் கூறவேண்டும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ ல.சு.க.யின் தோல்விக்கும் ஐ.தே.க.யின் வெற்றிக்கும் சில ஸ்ரீ ல.சு.கட்சி உறுப்பினர்கள் செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் நேற்று இடம்பெற்ற பொதுக் கூட்டமொன்றில் கூறியுள்ளார்.
நாட்டின் நலனுக்காகவும், தேசிய நன்மை கருதியுமே இருபெரும் கட்சிகளும் கட்சியின் கொள்கை வேறுபாடுகளையும் புறந்தள்ளி விட்டு கூட்டரசாங்கம் அமைத்ததாக கடந்த காலங்களில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பலரும் தெரிவித்து வந்தனர்.
தற்பொழுது அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் இவ்வாறு கட்சி நலனுக்காகவே கூட்டரசாங்கம் அமைத்தோம் என பகிரங்கமாக கூறியிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.