UNP-SLFP உடன்படிக்கை இன்றுடன் நிறைவு, மீண்டும் தொடர்ந்தால் வெட்கக் கேடு- டளஸ்

281 0

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்த காலம் இன்று 31 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருவதாக கூட்டு எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் ஜனவரி 1 ஆம் திகதியின் பின்னர் இந்த சம்பந்தத்தை தொடர்வதாயின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் மகுட வாசகமாக “திருடர்களுடன் நிர்வாணிகள்” என மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஐ.தே.கட்சியுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த ஆகஸ்ட் 21 ஆம் திகதியுடன் நிறைவடைந்த போதிலும் அது இம்மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டது.

இந்த உடன்படிக்கைக் காலத்தை இன்னும் ஒரு வருடத்துக்கேனும் நீடித்துக் கொள்ளுமாறு கட்சியின் போஷர்களில் ஒருவரான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளதாகவும் டளஸ் அழகப்பெரும சுட்டிக்காட்டியுள்ளார்.

உடன்படிக்கையை நீடிக்குமாறு ஐ.தே.க.யிடம் கெஞ்சும் நிலைக்கு ஸ்ரீ ல.சு.க. உறுப்பினர்கள் மாறியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment