கோரிக்கை நிறைவேற்றாவிடின்,வாக்காளர் அட்டை விநியோகம் இடம்பெறா- தொழிற்சங்கம்

1288 0

உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கு முன்னர் தபால் திணைக்களத்தை மூடிய முறைமையிலான திணைக்களமாக உத்தியோகபுர்வமாக அறிவித்து, அதற்கு தேவையான நிருவாக கட்டமைப்பை ஒழுங்கு செய்யாவிடின் தபால் மூல வாக்குகளை ஏற்றுக் கொள்வது மற்றும் வாக்காளர் அட்டைகளை விநியோகித்தல் என்பன முழுமையாக நிறுத்தப்படும் என தபால் தொழிற்சங்க தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

அரசாங்கம் தொடர்ந்தும் தம்மை ஏமாற்ற நடவடிக்கை எடுத்தால் தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் ஒன்றில் குதிப்பதை தவிர வேறு வழியில்லையென கூட்டு தபால் தொழிற்சங்க முன்னணியின் ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

தபால் மூலம் விநியோகிக்கவுள்ள வாக்காளர் அட்டைகள் தடைப்பட்டு வாக்காளர் பாதிக்கப்படின் அதற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கமே ஏற்க வேண்டும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Leave a comment