வேட்பாளர்களைப் பாதுகாத்துக் கொள்வதே மஹிந்த குழுவுக்கு சவால்- துமிந்த

523 0

பொதுஜன பெரமுனவினால் தமக்கு வாக்களிக்கும் வாக்காளர்களை சேர்த்துக் கொள்வது எப்படிப் போனாலும், பட்டியலில் பெயரிட்ட வேட்பாளர்கள் வெளியே செல்வதை தடுக்க முடியாதுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுன தலைமையில் வேட்பாளராக பெயரிடப்பட்ட பலர் அடுத்துவரும் நாட்களில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணையவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதுவரையில் பொதுஜன பெரமுன கட்சியிலிருந்த வேட்பாளர்களாக பெயரிட்ட 10 பேர் ஸ்ரீ ல.சு.க.யுடன் இணைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment