நீரோடைக்கு அருகில் சடலம்

1664 16

எல்லே, நாவலகம என்ற பகுதியில் உள்ள நீரோடைக்கு அருகிலிருந்து உருக்குலைந்த நிலையில்  ஆணொருவரின் சடலத்தை எல்லே பொலிஸார் இன்று (31)  மீட்டுள்ளனர்.

சடலமொன்று கிடப்பதாக எல்லே பொலிசாருக்கு தகவல் கிடைத்த தகவலின் அடிப்படையில் இது மீட்கப்பட்டுள்ளது.

சடலத்தின் சட்டைப் பைக்குள் கிடந்த அடையாள அட்டையின் பிரகாரம் அந்தச் சடலம் நாவலகம பகுதியைச் சேர்ந்த ஜே.எம்.பிரேமசிறி (52)  என அடையாளம் காணப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனைக்காக தற்போது அந்தச் சடலம் பண்டாரவளை அரசினர் மருத்துவமனையில்    வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment