மருதானை தொழில்நுட்ப சந்தியில் அமைந்திருக்கும் புகையிரத தலைமையகத்தில் புகையிரத பாதுகாவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அவர் கடமையில் இருந்து போது தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியை பயன்படுத்தி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நுகேகொட, எம்புல்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
எவ்வாறாயினும் தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
சம்பவம் தொடர்பான மரண விசாரணை மாளிகாகந்தை நீதவானினால் மேற்கொள்ளப்பட உள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.