தேர்தலுடன் சம்பந்தப்பட்ட முறைப்பாடுகள் 53 இதுவரை கிடைத்துள்ளது!

300 0

உள்ளூராட்சி சபைத் தேர்தலுடன் சம்பந்தப்பட்ட முறைப்பாடுகள் 53 இதுவரை கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

அவற்றில் தேர்தல் முறைப்பாடுகள் 36ம் தேர்தல் சட்ட மீறல்கள் குறித்து 17 முறைப்பாடுகளும் கிடைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் நேற்றைய தினத்திற்குள் 02 முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.

சுவரொட்டிகள், பதாகைகள் மற்றும் இலாஞ்சனை பொறிக்கப்பட்ட வாகனங்கள், ஒலி பெருக்கிகளுடன் வாகனங்கள் தேர்தல் நடவடிக்கையில் ஈடுபடுதல் சுவரொட்டிகளை ஒட்டுதல் மற்றும் அருகில் வைத்திருத்தல் மற்றும் சட்டவிரோத பேரணிகள் சம்பந்தமாக அந்த முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் தற்போதுவரை 44 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.

Leave a comment