சிதைக்கப்பட்ட மற்றும் கிழிந்த நாணயத்தாள்களை மாற்றிக் கொள்வதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் இலங்கை மத்திய வங்கியினால் நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி எதிர்வரும் 2018 ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் திகதிக்கு முன்னர் அருகில் உள்ள வங்கிக் கிளைகளில் மாற்றி கொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
முன்னதாக இந்த கால அவகாசம் இம்மாதம் 31ஆம் திகதி வரை வழங்கப்பட்டிருந்தது.
இவ்வாறான நாணயத்தாள்களை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம் என்றும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
நாணயத்தாள்களை வேண்டுமென்றே சேதப்படுத்தல், 1949ம் ஆண்டு இலக்கம் 58 நிதி சட்டத்திற்கு அமைவாக தண்டப்பணம் அல்லது சிறைத்தண்டனை வழங்கக்கூடிய குற்றமாகும் என, அரசாங்கத் தகவல் திணைக்கள செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.