தேர்தல் காலத்தில் விநியோகிக்க கொண்டு வரப்பட்டதாக கூறப்படும் 625 அல் குரான் புத்தகங்கள் கல்பிட்டி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இம்முறை கல்பிட்டி பிரதேசசபைத் தேர்தலில் போட்டியிடும், வேட்பாளர் ஒருவரின் வீட்டில் இருந்தே இவை கிடைக்கப் பெற்றுள்ளன.
நேற்று 30ம் திகதி இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில், கல்பிட்டி – முதலப்பாளி பகுதியைச் சேர்ந்த வேட்பாளர் ஒருவரே சம்பந்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
புத்தளம் மாவட்ட செயலக அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் தேர்தல் காரியாலயத்திற்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமையவே இந்த சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மேலும், கல்பிட்டி பகுதியிலுள்ள பள்ளிவாசல்களுக்கு விநியோகிக்கவே இவை, வைக்கப்பட்டிருந்ததாக, வீட்டு உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார்.
எதுஎவ்வாறு இருப்பினும், இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் கைதுசெய்யப்படவில்லை.
இது குறித்த மேலதிக விசாரணைகளை கல்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.