முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரன் தலைமையில் புதிய கட்சி விரைவில் உதயம்?

860 0

வடமாகாண சபையின் முக்கிய அமைச்சராக இருந்து பதவியிலிருந்து இறக்கப்பட்ட பா. டெனீஸ்வரன் தான் சார்ந்திரந்த ரெலோ கட்சியினராலும் புறக்கணிப்பட்டிருந்த நிலையில் தனி வழி செல்லத் தயாராகியுள்ளார். மிக வரைவில் அவர் முன்னாள் போராளிகளை உள்ளடக்கிய புதிய கட்சியை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது முன்னாள் வடமாகாண போக்குவரத்து அமைச்சரும் மாகாண சபை உறுப்பினருமான பா.டெனீஸ்வரன் தலைமையில புதிய கட்சியொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.முன்னாள் போராளிகள்,  மாவீரர்களின் குடும்ப உறவினர்களை உள்ளடக்கியதாக அந்த கட்சி அமைக்கப்படவுள்ளது.

கட்சி அமைக்கப்பட்ட பின்னர் உறுப்பினர்களின் கருத்துகளின் பிரகாரம், எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பிலும் தீர்மானிக்கப்படவுள்ளது.அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்குமான தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment