மீண்டும் தீவிர அரசியலில் கெஹேலிய ரம்புக்வெல? மஹிந்த அணியிலிருந்து விரைவில் பல்டி?

303 0

மஹிந்த அணியான கூட்டு எதிரணியை பிரதிநிதித்துவப்படுத்தும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல அரசில் இணைவது உறுதியாகிவிட்டதாக அரச தரப்பின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.முன்னதாக தாமரை மொட்டு சின்னத்திலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அங்கத்துவத்தைப் பெறவேண்டுமென கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் முக்கிய பிரமுகரொருவர் விடுத்த கோரிக்கையை கெஹலிய ரம்புக்வெல்ல நிராகரித்துவிட்டார் என அறியமுடிகின்றது.அரசுடன் இணையும் பட்சத்தில் ஊடக இராஜாங்க அமைச்சுப் பொறுப்பு கெஹலியவுக்கு வழங்கப்படுமென அரச உயர்மட்ட வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

Leave a comment