மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மூலம் இதுவரை பதிவுசெய்யப்படாத மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்வதற்கான அனுமதியை வழங்குவதற்கு அரசு அவதானம் செலுத்தியுள்ளது.
இவ்வாறு மோட்டார் சைக்கிள்கள் பதிவு செய்யப்படாததால் அரசுக்கு வருடாந்தம் பாரிய இழப்பு ஏற்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் அதிகரித்துள்ள சட்டவிரோத செயற்பாடுகளை தடுக்கும் நோக்கில் சட்டத்தை ஸ்திரப்படுத்துவதற்கு இந்தப் பதிவுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே உரிய சட்டரீதியான ஆவணங்கள் இல்லாத மோட்டார் சைக்கிள்களை பரிசோதித்த பின் அவற்றுக்கான பதிவுகளை மேற்கொள்ள அரசு தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் பதிவுகளுக்கான அனுமதியைப் பெற போக்கவரத்து அமைச்சர் நிமல்ஸ்ரீபால டீ சில்வா அமைச்சரவையில் பத்திரத்தை சமர்ப்பித்ததையடுத்து அதற்கான அனுமதி அமைச்சரவையால் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.