பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு 40,000 மெட்ரிக் தொன் உரம் வழங்க பாகிஸ்தான் பிரதமர் உறுதியளித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
தன்னுடன் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போது பாகிஸ்தான் பிரதமர் இதனைக் கூறியதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.
இலங்கை எதிர்நோக்கியுள்ள உரப் பிரச்சினை சம்பந்தமாக தொலைபேசி மூலம் பாகிஸ்தான் பிரதமரிடம் தெரிவித்த போது அவர் இந்த உறுதி மொழியை வழங்கியதாக ஜனாதிபதி கூறினார்.