ரஷ்யாவிற்கான தேயிலை ஏற்றுமதி நாளை (சனிக்கிழமை) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கொழும்பு தேசிய விற்பனையாளர்களின் ஒழுங்கமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கை தேயிலையில் வண்டுகள் இருப்பதாக தெரிவித்து, இலங்கை தேயிலைக்கு ரஷ்யா தற்காலிக தடை விதித்திருந்தது. குறித்த தடையின் காரணமாக ரஷ்யாவிற்கான ஏற்றுமதி கடந்த இரண்டு வாரங்களாக தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ரஷ்யாவின் தொழில்நுட்ப குழுவொன்று அடுத்த வருட முற்பகுதியில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக மொஸ்கோவில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குழு இலங்கையின் தேயிலை உற்பத்தி, களஞ்சியப்படுத்தல், ஏற்றுமதி உள்ளிட்ட செயற்பாடுகளை கண்காணிக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.