இலவசமாக வழங்கப்படும் பாடசாலைப் புத்தகங்கள் விற்பனைக்கு ! – வெளியீட்டு ஆணையாளர் மறுப்பு

341 0

இலவசமாக வழங்கப்படும் பாடசாலைப் புத்தகங்களை விற்பனை செய்வதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானதென கல்வி அமைச்சின் வெளியீட்டு ஆணையாளர் நாயகம் ஐ.எம்.கே.பி.இலங்சிங்ஹ தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியீட்டு ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவிக்கையில்; குறுகிய அரசியல் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளும் நோக்கில் பல்வேறு குழுக்களை தூண்டுவதன் மூலம் இந்த பிரசாரம் மேற்கொள்ளப்படுவதாக சுட்டிக்காட்டினார்.

இந்த வருடத்தில் பாடசாலை புத்தகங்களை அச்சிடுவதற்காக 3 பில்லியன் ரூபாவுக்கு மேற்பட்ட தொகை செலவிடப்பட்டுள்ளது. அரச அச்சுத் திணைக்களத்தில் நிலவும் வேலைப்பளு காரணமாக சில புத்தகங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்துப் புத்தகங்களும் கல்வி அமைச்சுக்கு கிடைத்திருந்ததாக அவர் தெரிவித்தார்.

இவற்றை மாணவர்களுக்கு வழங்க ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை புத்தகங்கள் கிடைக்கப் பெறாதவர்களுக்கு விரைவாக அவற்றை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாடப்புத்தகங்களுக்கு பதிலாக வவுச்சர்கள் வழங்கப்பட இருப்பதாக வதந்திகள் பரப்பப்டுவதை கல்வி அமைச்சின் வெளியீட்டு ஆணையாளர் நாயகம் ஐ.எம்.கே.பி.இலங்சிங்ஹ நிராகரித்துள்ளார்.

Leave a comment