கொழும்பு கொலன்னாவை எரிபொருள் களஞ்சியசாலை அமைந்துள்ள பகுதியில் மேலும் 10 புதிய எண்ணெய் தாங்கிகளை அமைக்கும் பணிகள் கனியவளத்துறை அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தை அமைச்சரவை அனுமதியுடனேயே ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
குறித்த திட்டத்தின் கீழ் 11,200 மெட்ரிக் தொன் கொள்ளளவுள்ள 3 எண்ணெய் தாங்கிகளும், 11,900 மெட்ரிக் தொன் கொள்ளளவு கொண்ட விமான எரிபொருள் தாங்கியொன்றும், 11,600 மெட்ரிக் தொன் டீசல் தாங்கியொன்றும், 5,800 மெட்ரிக் தொன் டீசல் தாங்கிகள் மூன்றும், மண்ணெண்னை தாங்கியொன்றும் மற்றும் 3,800 மெட்ரிக்தொன் டீசல் தாங்கியொன்றும் உருவக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுதொடர்பாக அமைச்சர் தெரிவிக்கையில், தற்போது ஒருமாதகாலம் மாத்திரமே எரிபொருட்களை களஞ்சியசாலைகளில் வைத்திருக்க முடியும் இந்தத் திட்டத்தின் மூலம் 60 நாட்கள் எரிபொருட்களை இருப்பில் வைத்துக்கொள்ள முடியும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
தற்போது நாட்டின் எரிபொருள் தேவை 90 சதவீதம் அதிகரித்துள்ளமையாலேயே இந்தத் திட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.
தற்போதைய எண்ணைத் தாங்கிகள் 40 வருடங்கள் பழமையானவையாகும்.
இதனால் 40 வடங்களுக்குப் பின் மீண்டும் புதிய எண்ணைத் தாங்கிகள் அமைக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதேபோல திருக்கோணமலை எண்ணைத் தாங்கிகளையும் இந்தியாவுடன் சேர்ந்து சீரமைக்கும் பணிகள் விரைவில் நடைபெறும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.