எட்டு கிலோவும் 100 கிராம் நிறையுடைய கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் பொலிஸ் தலைமையக நச்சு போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
நேற்று மாலை புத்தளம் பொலிஸ் பிரிவில் எருக்கலம்பிட்டிய புகையிரத நிலையத்திற்கு அருகில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரங்குளி, விரிதோடை பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சைக்கிள் ஒன்றில் கேரளா கஞ்சா பொதியை எடுத்துச் சென்று கொண்டிருந்த போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்களை புத்தளம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.