குடும்ப சுகாதார உத்தியோகத்தர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்களின் சீருடைகளை மாற்ற நடவடிக்கை

277 0

குடும்ப சுகாதார உத்தியோகத்தர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஆகியோரின் சீருடைகளை மாற்றுவது குறித்து சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரட்ன கவனம் செலுத்தியுள்ளார்.

இதற்குரிய கருத்துக்களை நடத்துவதற்கும் , ஆலோசனைகளையும் சமர்ப்பிப்பதற்கும் துறைசார்ந்த தொழிற் சங்கங்களிடம் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சுகாதாரத்துறை சார் உத்தியோகத்தர்களின் சீருடைகளில் காலோசிதமான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது அமைச்சரின் நிலைப்பாடாகும். தொழிற்சங்க அமைப்புக்களின் யோசனைகள் கிடைத்ததும், பேச்சுவார்த்தை நடத்தி இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a comment