ஜனாதிபதி மைத்திரியை உலகம் மதிக்கும் போது ஆனந்த கண்ணீர் வருகிறது-அமைச்சர் மஹிந்த அமரவீர

335 0

amaraweeraதேசிய உடை அணியும் ஜனாதிபதியை உலக நாடுகளில் உள்ளவர்கள் மதிக்கும் போது கண்களில் ஆனந்த கண்ணீர் வருவதாக கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இன்று ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் இலங்கை மீதான சர்வதேச நெருக்கடிகளை சமாளிக்க முடியாததாலேயே மஹிந்த திடீரென ஜனாதிபதி தேர்தலை நடத்தினாரே தவிர ஜோதிடர் சுமனதாசவின் பேச்சைக் கேட்டதால் அல்லவென்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தான் இதுவரை இரண்டு,மூன்று தலைவர்களுடன் வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ள போதிலும்,தற்போது வெளிநாடுகளில் நல்லாட்சி ஜனாதிபதி மைத்திரிக்கு கிடைக்கும் கௌரவமும்,மரியாதையும் வேறு எந்த இலங்கை ஜனாதிபதிகளுக்கும் கிடைக்கவில்லை என்றும்,அதை நேரடியாக பார்க்கும் போது கண்கள் கலங்குவதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்