கல்வி அமைச்சின் புதிய செயலாளராக எஸ்.எஸ்.ஹெட்டியாராய்ச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை நிர்வாக சேவையில் சிரேஸ்ட அதிகாரியான இவர் காலை 9.30 மணியளவில் கல்வி அமைச்சில் தனது கடமைகளை பொறுப்பேற்பார் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
சில காலங்களாக ஓய்வூதிய பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றிய ஹெட்டியாராய்ச்சி ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளராகவும் கடமையாற்றியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.