வடக்கு பகுதியில் கன்னி வெடிகளை அகற்றும் நடவடிக்கைகளுக்கு 90 மில்லியன் ரூபா வழங்குவதற்கு ஜப்பான் தீர்மானித்துள்ளது.
ஜப்பானின் மனித உரிமைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இந்த நிதியுதவி இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது.
இலங்கையில் சமாதானத்தை கட்டியெழுப்புதல், மறுசீரமைப்பு, நல்லிணக்கம் ஆகியவற்றை மேம்படுத்தல் என்பவற்றை நோக்காகக் கொண்டு வடமாகாணத்தில் கன்னிவெடி அகற்றும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மீள்குடியேறும் மக்களுக்கு பாதுகாப்பான பிரதேசத்தை வழங்கும் இலங்கை அரசின் நடவடிக்கைகளுக்கு குறித்த வேலைத்திட்டத்தின் மூலம் ஒத்துழைப்பை வழங்க முடியும் என ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.
இதேவேளை இதற்கு முன்னரும் 2003ம் ஆண்டு முதல் வடக்கு கிழக்கு பகுதியில் கன்னி வெடிகளை அகற்றும் நடவடிக்கைகளுக்காக ஜப்பான் அரசு 32 மில்லியன் அமரிக்க டொலர்களை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.