எனது வாளுக்கு யார் வெட்டுப்படுவார்கள் என்பது தெரியாது- சிறிசேன

259 0

பவத் கீதையில் கூறப்படுவது போல என்னுடைய வாளுக்கு யார் வெட்டுப்படுவார்கள் என்று என்னால் கூறமுடியாதுள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளுராட்சி சபைக்கான தேர்தல் விஞ்ஞாபன  வெளியீட்டு நிகழ்வு இன்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

என்னுடைய வாளுக்கு வெட்டுப்படுவது எனது குடும்ப உறவினர்களா?  நண்பர்களா? எனக்கு  நெருக்கமானவர்களா?  யார் என்பது எனக்குத் தெரியாது. யாரானாலும் வெட்டுப்பட்டுச் செல்வார்கள் என பகவத் கீதையில் கூறப்படுகின்றது.

அதேபோன்றுதான், தூய்மையான அரசியல் கலாசாரமொன்றை நாட்டுக்கு கொடுப்பதற்கு என்னுடைய வாளுக்கும் யார் வெட்டுப்படுவார்கள் என்பதை என்னால் கூற முடியாது எனவும் ஜனாதிபதி மேலும் கூறினார்.

Leave a comment