ஜனாதிபதி மதுபான நிவாரணப் பிரிவின் கீழ் மதுபானம், சிகரட் உட்பட மதுபாவனையிலிருந்து விடுபடுவதற்கான விழிப்புணர்வு செயற்திட்டம், மஸ்கெலியா நகரில் இன்று (28) நடைபெற்றது.
இதற்கு மஸ்கெலியா பொலிஸ் அதிகாரிகள், பிரவுண்ஸ்வீக், ஹப்புகஸ்தென்ன, கங்கேவத்த, லக்கம் ஆகிய பாடசாலைகளின் தமிழ் மாணவர்கள் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
மதுபானம், புகைப்பிடித்தல் காரணமாக ஏற்படும் தீங்குகள் குறித்து அறிவுறுத்தலும் இடம்பெற்றது.
தொடர்ந்து பொது மக்களுக்கான விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்றும் நடைபெற்றது. இந்த ஊர்வலம் மஸ்கெலியா பொலிஸ் நிலைய சந்தியில் இருந்து மஸ்கெலியா நகரம் வரையும் சென்றது.
இந்த செயற்திட்டத்தின் ஊடாக சிகரட் மற்றும் மதுபானப் பாவனை உண்டாகுவதற்கான காரணம், உடல், உள பிரச்சினைகள், சமூக சீர்கேடுகள், தடுப்பதற்கான முறைகள், சிகரட் மதுவற்ற எதிர்கால சமூகம், போன்றவையும் வீதி நாடகத்தின் ஊடாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்தச் செயற்திட்டம் மஸ்கெலியா பொலிஸ் நிலையமும், அபிவிருத்திக்கான வலுவூட்டல், அனைத்துலக மருத்துவ நல அமைப்பு ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.