உலகளவிலான உணவுப் பாதுகாப்புச் சுட்டியில் 113 நாடுகளின் பட்டியலில் சிறிலங்கா 66 ஆவது இடத்துக்குப் பின்தள்ளப்பட்டுள்ளது.
எக்கனமிஸ்ட் நாளிதழின் புலனாய்வு அலகு ஆண்டு தோறும் உணவுப் பாதுகாப்புச் சுட்டி என்ற பட்டியலைத் தயாரித்து வருகிறது.
2017ஆம் ஆண்டுக்கான உணவுப் பாதுகாப்புச் சுட்டி தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 113 நாடுகள் இடம்பெற்றுள்ள இந்தப் பட்டியலில் சிறிலங்கா 66 ஆவது இடத்தில் உள்ளது.
2013ஆம் ஆண்டில், 107 நாடுகள் இடம்பெற்றிருந்த இந்தப் பட்டியலில் சிறிலங்கா 60 ஆவது இடத்தில் இருந்தது.தற்போது ஆறு நாடுகள் இந்தப் பட்டியலில் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், சிறிலங்கா ஆறு இடங்கள் பின்தள்ளப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 113 நாடுகளின் பட்டியலில் 65 ஆவது இடத்தில் இருந்த சிறிலங்கா இந்த ஆண்டு மேலும் ஒரு இடம் பின்தங்கியுள்ளது.உணவுப் பாதுகாப்புச் சுட்டியில், அயர்லாந்து முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கா, பிரித்தானியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் அதனையடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.