மீனவப் படகு மூலம் கடத்தப்படவிருந்த பெருந்தொகை தங்கக்கட்டிகள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்தே குறித்த தங்கக் கட்டிகள் மீட்கப்பட்டதுடன், இரண்டு சந்தேகநபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
காங்கேசன் துறை கடற்படையினருக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இந்தியாவிற்கு கொண்டு செல்லப்படவிருந்த நிலையில் குறித்த தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை சர்வதேச சந்தையில் தங்கம் கிலோ ஒன்று 42,998 அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்ற வேளை நேற்றைய தினம் கைப்பற்றப்பட்ட குறித்த தங்கக் கட்டிகளின் பெறுமதி 34,858,970 ரூபாய் என்றும் கடற்படை தலைமையகம் தெரிவித்துள்ளது.