உயர்தர பரீட்சையில் பௌதீக விஞ்ஞான பிரிவில் நுவரெலியாவில் திஷாந்தன் முதலிடம்!

254 0

வெளியான கல்விப் பொதுத்தராதர உயா்தரப்பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், ஹற்றன் ஹைலண்ஸ் கல்லூரியின் மாணவன், பௌதீக விஞ்ஞான பிரிவில் நுவரெலியா மாவட்டத்தில் முதலாம் இடத்தினையும், அகில இலங்கை ரீதியில் ஒன்பதாவது இடத்தினையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இராகலை ஹல்கரனோயா பகுதியை வசிப்பிடமாகவும், ஹற்றன் ஹைலண்ஸ் கல்லூரியில் கல்வி பயிலும் அ.திஷாந்தன் என்ற மாணவனே மூன்று ஏ என்ற பெறுபேற்றைப் பெற்று நுவரெலியா மாவட்டத்தில் முதல் நிலைபெற்றுள்ளார். மேலும் அகில இலங்கை ரீதியில் 9ம் இடத்தினை பெற்றுள்ளார்.

இதேவேளை இந்த மாணவன் கல்விப் பொதுத்தராதர உயா்தரப்பரீட்சை மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையிலும் சிறந்த பெறுபேற்றை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்திருந்தார்.

இந்த மாணவனை ஹற்றன் ஹைலண்ஸ் கல்லூரியின் அதிபர் ஆர்.ஸ்ரீதரன், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கல்வி பொதுத்தரதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், ஹற்றன் ஹைலண்ஸ் கல்லூரியின் மாணவி, நுண்கலை பிரிவில் நுவரெலியா மாவட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்று சாதனை படைத்துள்ளார்.

ஹற்றன் ஹைலண்ஸ் கல்லூரியில் கல்வி பயிலும் எஸ்.பிரமிதா என்ற மாணவியே 2ஏ, 1பீ பெறுபேற்றைப் பெற்று நுவரெலியா மாவட்டத்தில் முதல் நிலைபெற்றுள்ளார். மேலும் அகில இலங்கை ரீதியில் 52ம் இடத்தினை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment