போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட தாயும் பிள்ளையும் காலி பொலிஸ் மோசடி தடுப்பி பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
37,815 மில்லி கிராம் ஹெரோய்ன் விற்பனைக்காக கொண்டு செல்லப்படும் போது தாயும் மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தப் போதைப் பொருளின் பெறுமதி சுமார் 07 இலட்சம் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரான தாய் 58 வயதுடையவர் என்றும் மகன் 39 வயதுடையவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காலி வெல்வத்த சரணங்கார மாவத்தையில் இந்த சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.