உள்ளுராட்சி சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட கடந்த 9 ஆம் திகதி முதல் இன்று (28) காலை 6 மணி வரையான காலப் பகுதியில் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பிலான 32 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
மேற்படி முறைப்பாடுகள் தொடர்பில் 34 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தலைமையகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.