பாதாள உலகக்குழு அரசியல்வாதியிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் தாம் விசேட பாதுகாப்பு பெற்றுக்கொண்டதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தமது அரசியல் கட்சியின் உறுப்பினர்களினால் இந்த பாதுகாப்பு வழங்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு வடக்கின் பாதாள உலகக்குழு அரசியல்வாதி ஒருவரிடமிருந்து தம்மையும் கட்சி முக்கியஸ்தர்களையும் பாதுகாத்துக் கொள்ள இவ்வாறு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு என்ற அடிப்படையில் மனோ கணேசன் லஞ்சம் பெற்றுக்கொண்டதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்