கேப்பாபுலவில் காணிகள் விடுவிப்பு

259 0

முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாபுலவில் இராணுவத்தினர் வசம் உள்ள மக்களின் காணிகளில் 133 ஏக்கர் காணி இன்று இராணுவத்தினரால் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான நிகழ்வு இன்று முல்லைத்தீவில் நடைபெற்றது.
இன்றை நிகழ்வில் வற்றாப்பளை சீனிமோட்டையில் 17 குடும்பங்களுக்கான 21.84 ஏக்கர் காணியும், கோப்பாபிலவில் 68 குடும்பங்களுக்கான
111-5 ஏக்கர் காணியும் விடுவிக்கப்பட்டுள்ளன.

மொத்தமாக 85 குடும்பங்களுக்கான காணி இன்று உரியவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
138 குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் கேப்பாபுலவு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று 303ஆவது நாளாக கேப்பாபுலவு பூர்வீக கிராமத்தை விடுவிக்குமாறு வலியுறுத்தி அக்கிராம மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ள நிலையில் இன்றையதினம் 85 குடும்பங்களுக்கான 133 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது

.

 

Leave a comment