ஊவா மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் ரத்னாயக்கவை பதவியிலிருந்து விலக்குமாறு கூறி அவருக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரேரணையில் ஊவா மாகாண சபையின் 12 உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
2018ம் வருடத்திற்கான வரவு செலவுத்திட்டம் சபையில் சமர்பிக்கப்பட்டதை அடுத்து ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் அதற்கு எதிர்ப்பை தெரிவித்து சபையிலிருந்து வெளியேறியமை, வரவு செலவுத் திட்டத்தை புறக்கணித்தமை காரணமாகவே எதிர்க்கட்சி தலைவருக்கு எதிராக குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படவுள்ளது.